மூலிகை குண அட்டவணை
**1. மூலிகை குண அட்டவணை:
சீந்தில் - காயசித்தி2. மருள் - விரணாரி
காஞ்சொறி - கபாரி
பெருங்காஞ்சொறியு மது
ஆடாதோடை - சுராரி
கருங்காலி - குஷ்டாரி
வெண் கருங்காலி - நாகமணி பந்தனி
வேம்பு - பித்தாரி
பெருவேம்பு - வாதாரி
நிலவேம்பு - சுராரி, சூதகநாசி, வாயுகாரி
சர்க்கரை வேம்பு - காயசித்தி
கோரைக்கிழங்கு - தோஷாரி
பற்பாடகம் - சக்ஷாப்தம்
வெட்டிவேர் - தாபாரி
விலாமிச்சம்வேர் - பித்தாரி
பேய்ப்புடல் - பித்தாரி
வட்டத்திரிப்பி - பேதி மர்த்தனி
குமிள் - சன்னி மர்த்தனி
பெருங்குமிழ் - சுர மர்த்தனி
கண்டங்கத்தரி - சுவாச மர்த்தனி
சிறுவழுதலை - சுவாசகாச மர்த்தனி
வழுதலை - சிலேட்டும மர்த்தனி
நெரிஞ்சில் - மூத்திரகிரிச்ச மர்த்தனி
வில்வம் - சத்தி மர்த்தனி
முன்னை - மேகமர்த்தனி
கழற்கொடி - விரைவாத மர்த்தனி
வெண்கழற் கொடி - குன்ம மர்த்தனி
கொட்டைக்கரந்தை - வாக்குதாரி
நாறுங்கரந்தை - காயசித்தி
நன்னாரி - தேகசித்தி
பேய்ப்பீர்க்கு - கெந்தகத்தைலம்
மற்றைப் பீர்க்கு - வாதசமனம்
பழுப்பாகல் - லிங்கபந்தனி
முள் வெள்ளரி - கிரிச்சாரி
நிலவுகாய் - சத்திறக்கி
வெண் கிலுகிலுப்பை - சூதபற்பி
கோவை - ஜலக் கழிச்சலாற்றி
தீங்கோவை - பரவிந்து பந்தனி
கொன்றை - கிருமி மர்த்தனி
எலிச்செவி - நீர்ச்சுருங்கி
சதுரக்கள்ளி - பாஷாண மைனி
சிவதை - விரோசனி
பிரசூதிகை - வாயுஹாரி
நாயுருவி - மந்தாரி , குன்மகாரி
மேற்படி லவணம் - சருவ வுபரச மர்த்தனி மேற்படி கட்டு, மேற்படி களங்கு
செஞ்சதுரக்கள்ளி - தங்க தாம்பரி
சாறடை - திமிர்வாத மர்த்தனி
மூக்குறட்டை - பீனிச மர்த்தனி
செம்முள்ளி - சிலேட்டும மர்த்தனி
சித்தாமுட்டி - சுர மர்த்தனி, சூத பந்தனி
பேராமுட்டி - சர்வ சுர மர்த்தனி
பாளை - சுளுக்குப் போக்கி
திருநாமப்பாலை - பித்தாரி
குட சப்பாலை - அதிசார மர்த்தனி
வெட்பாலை - அயவங்கி, சூத சிந்தூரி
பழப்பாலை - பித்தாரி
முதியார் கூந்தல் - காரீய பற்பி
வெள்ளையாமணக்கு - வாதம் போக்கி
செவ்வாமணக்கு - காதிலிங்க பந்தனி
மாதளை - அயமுருக்கி
கொம்மட்டி மாதளை - சத்தி போக்கி
விளா - பித்தம் போக்கி
குட்டிவிளா - தாக மடக்கி
சர்க்கரை - தாகம் போக்கி, மயக்கம் போக்கி
கரும்பு - கல்லடைப்புப் போக்கி
வெண்கரும்பு - க்ஷயம் போக்கி
அமுக்கிறா - க்ஷயம் போக்கி, வாயுபோக்கி, வங்க நாக சிந்தூரி
பிரமி - வீக்கம் போக்கி, விரோசனி, வாத மாற்றி
பூனைக்காஞ்சொறி - சிலேட்டும மர்த்தனி
பூனைக்காலிப் பருப்பு - தம்பனி, சுக்கில பந்தனி
சிறுபூனைக்காலி - நீரிறக்கி, நீரிளக்கி
மந்தாரை - பாஷாண மைனி
கொக்கிறகு - சாதிலிங்க மைனி
அழிஞ்சில் - விஷ மர்த்தனி
மேற்படி மூல தைலம் - விரோசனி, லிங்க பந்தனி
பாகல் - பாஷாண தோஷ மர்த்தனி
காட்டத்தி - கிராணி நீக்கி, கிரகிணி நீக்கி
சரளம் - தங்க நீற்றி
முள்முள்ளிக்கீரை - சர்வசரக்கு கட்டொடத்தி, தங்கச்சுன்னி
முசுமுசுக்கை - க்ஷயமர்த்தனி, பவழ பற்பி
புன்னை - கிரந்தி போக்கி
கீழாநெல்லி - காமாலை போக்கி, பித்தம் போக்கி
கருங்கொள் - உருக்கினமாதல்
கூகைநீறு - உஷ்ணம் போக்கி
தேற்று - சலமலினாரி
தகரை - மாந்தம் போக்கி
ஊமத்தை - சூதவெண்ணெ யிறுக்கி
சேவகனார் கிழங்கு - கடிகை போக்கி
கரிசாலை - பாண்டு மர்த்தனி, க்ஷய மர்த்தனி, வசீகரி
பொற்றலை - காயசித்தி, சிந்துராதி
எருக்கு - சன்னி போக்கி, க்ஷீரம்...ணம் போக்கி
வெள்ளெருக்கு - சாரங் கட்டி
மணத்தக்காளி - தணலாற்றி
கருந்தக்காளி - கெந்தி கட்டி
குன்றி மணி - காரங்கட்டி
பெருமுள்ளங்கி - கிரிச்சரம் போக்கி
சிறுமுள்ளங்கி - கெந்தி கட்டி
ஆற்றுமுள்ளங்கி - சிலேட்டுமம் போக்கி
சுவர் முள்ளங்கி - நாக பற்பி, உப்புக் கட்டி
முருங்கை - கண் விரணம் போக்கி
மேற்படி பூ - விந்து கட்டி, தாம்பர சுத்தி
மேற்படி மூலம் - கட்டுடாத்தி
மேற்படி பிசின் - விந்து கட்டி
மேற்படி பத்திரி - மலம் போக்கி
ஈர்க்கு - வாயு மர்த்தனி
மேற்படி வேர்ப்பட்டை - வங்க பற்பி
புனல்முருங்கை - நாகங்கட்டி
துளசி - தோஷம் போக்கி
கருந்துளசி - செந்தூரத் தாதி
நீர்த்திப்பிலி - சன்னி போக்கி
வெள்ளுள்ளி - வாதம் போக்கி, தேக வலுவி, மூலம் போக்கி
ஈருள்ளி - வேகம் போக்கி, பித்த நாசி, சீதளி.
நொச்சில் - கடுப்புப் போக்கி
மேற்படி மூல தைலம் - லிங்க பந்தனி
மேற்படி பத்திரி - நீர் மர்த்தனி
கருநொச்சி - கறப்பான் போக்கி, வங்க பற்பி
பேயன் வாழை - காயசித்தி
மேற்படி கிழங்கு - வழலை போக்கி
மேற்படி பூ - சிந்தூரத்தாதி, வசிகரி
மேற்படி பத்திரி - உபரச பந்தனி
மேற்படி தண்டு - சர்வவிஷநாசி
மேற்படி பனி - உபரசாதி பவுதிக பந்தனி
மேற்படி லவணம் - சர்வபவுதிக பந்தனி
மேற்படி பழம் - ஜீரணகாரி, மலம் போக்கி
மேற்படி காய் - குற்றம் போக்கி
மேற்படி பூ - சுக்கில பந்தி, சுரோணித பந்தி, மல பந்தி
மேற்படி மூலம் - மதநாசி
இதர வாழைப்பூ - பெரும்பாடு போக்கி
வாழை - பெரும்பாடு போக்கி
வாழைக்கிழங்கு - உழலை போக்கி
மேற்படிகளின் மூல சலம் - சர்வ வுபசர பந்தனி
தென்னை - மரு€க்ஷ போக்கி
மேற்படி பூ - உபரச பந்தனி, மலபந்தனி சுரோணித பந்தனி உஷ்ண மர்த்தனி
மேற்படி கேரம் - காயசித்தி
மேற்படி பழம் - ஈடு முறித்தல், அறிவு விருத்தி
பனைக்கிழங்கு - வறுத்தி
பனை - வறுத்தி
மேற்படி பூ - கப நாசி
மேற்படி குருத்து - க்ஷயம் போக்கி
மேற்படி மூலரசம் - சூத பற்பி
மேற்படி கிழங்கு - வறுப்பில் பற்பி
நிலப்பனை - பாலையாம், க்ஷயம்போக்கி கரண ரோக மர்த்தனி
வெள்ளைக்காக்கணான் - விரோசனி, தங்கச் சுன்னி
முடக்கொத்தான் - வாதம் போக்கி
கசம்பை - தினவு, சுரம் போக்கி
சங்கங்குப்பி - குஷ்டம் போக்கி, கறப்பான் போக்கி
பொரும்பில் - விரணம் போக்கி
கறுப்பறுகு - காசம் போக்கி
வெள்ளறுகு - மேகம் நீக்கி, சுரம் போக்கி
பவளவறுகு - சுவாசம் போக்கி
புளியாரை - காயசித்தி, பித்த மர்த்தனி, லவண சிந்தூரி, அப்பிரேக சிந்தூரி
தாமரை - கண்குளிர்ச்சி
தாமரை வளையம் - நஞ்சு முறிச்சி
தாமரை மணி - வசிகரி
மேற்படி தாது - மேகம் போக்கி
மேற்படி கிழங்கு - ஆண்மை உண்டாக்கி, சூத பந்தனி
செங்கழுநீர் - திரிதோஷம் போக்கி, வசீகரி
அரக்காம்பல் - சிவேட்டுமம் போக்கி
கற்றாமரை - லோகச் செம்பி
வெண்டாமரை - சூத பந்தனி
குளிரி - உப்புக்கட்டி
மல்லிகை - எண்ணெய் போக்கி
கொடிமல்லிகை - தார பற்பி
ஆத்திமல்லிகை - மேனி அழகி
முல்லை - சோபந் தீரி
முல்லைப்பேதம் - முத்தோஷம் போக்கி
நந்தியாவட்டம் - கண்ணுக்காம்
இருவாட்சி - ரத்த பித்தம் போக்கி
செண்பகம் - மருக்கள் போக்கி, (பருக்கள் போக்கி)
சிறு செண்பகம் - பித்தம் போக்கி
செவ்வந்தி - சித்தப்பிரமை போக்கி
குங்குமவந்தி - கோழை போக்கி
எலுமிச்சை - பித்தம் போக்கி
சித்தீஞ்சில் - சிரதோஷம் போம்
பேரீஞ்சில் - சுரங்கள் போம்
முந்திரிப்பழம் - தோஷம் போக்கி
புளிமுந்திரி - திரிதோஷம் போக்கி
இலந்தை - கடுப்புப் போக்கி
இலுப்பை - விரணம் போக்கி
மலையிலுப்பை - வாதம் போக்கி
பலாசு - பேதி யாற்றி
முட்பலாசு - அரிதார நீறு
ஆலுக்கு - புழுக்கள் போம்
அரசுக்கு - புத்தி வர்த்தினி
இச்சில் - குஷ்டம் போக்கி
நாவல் - விரணம் போக்கி, வங்க பற்பி
அத்தி - பெரும்பாடு போக்கி, உஷ்ண சமனி
பேயத்தி - தம்பனை
பூவரசு - சகல விஷ குஷ்டம் போக்கி
அலரி - நடுக்கல் போக்கி
வன்னி - அயத் தாம்பரி, லவண சிந்தூரி
நீர்க்கடம்பு - நாக பந்தனம்
கடம்பு - பாஷாண பந்தனம்
வெண் கடம்பு - சூதபந்தனம்
வாகை - விரண நீக்கம்
கருவாகை - கெந்தி பந்தனம்
வேங்கை - கடி நீக்கம்
ஒட்டை - புதரி நீக்கம்
இலவு - அதிசார நீக்கம்
இலவம் பிசின் - சுக்கிலங் கட்டும்
மாமரம் - வாந்தி நிற்கும்
பொன்னாங்கண்ணி - கண்ணொளி, உஷ்ணசமனி
மாவிலிங்கை - சன்னி நீக்கம்
லோத்திரம் - கண்ணுக்கினிது
வெள்ளிலோத்திரம் - துரிசு குரு
வஞ்சிக்கு - இடுப்புறுதி
ஆற்று மருது - வழலை போக்கி
மாட்டுச் செவி மருது - வெள்வங்க பற்பி
குதிரைச் செவி மருது - கருவங்க பற்பி
இமிற் கிழங்கு - இகுளை நீக்கி
பாலிறில் - பாஷாணங்கட்டும்
தேட்கடை - சிரங்கு நீக்கி
நெய்ச்சிட்டி - சீதசுரம் போக்கி, குன்ம நாசி
சிறுவிடுகொள்ளு - தண்ர் கட்டு
பெருவிடு கொள்ளு - சாரநாசி
தண்ர் மிட்டான் - சிங்கி செம்பு
காகோளி - சலங்கணீக்கி
சீகக்ஷகாகோளி - திறமுண்டாக்கி
சீவகம் - கல்லுப்புக் கட்டு
மயிடவகம் - கெவுரிக் கட்டு
பேராமல்லி - சுரங்கள் போக்கி
சித்தாமல்லி - சலவை போக்கி
சிறுபுள்ளடி - கெணங்கள் போம்
அஷ்டிமதுகம் - பிரமியங்கள் போம்
பேர்சாரிபாதி - சூத பந்தனம்
பதுமுகம் - பாலையாம்
பிரபுணரிகம் - அப்பிரக சத்து
மேதை - மகாதோஷம் போம்
மாமேதை - துஷ்டசுரம் போம்
தேக்கு - சிரங்கு நீக்கி
ஞாழல் - தினவு போக்கி
பால்விழி - அய வங்கம்
பெருங்குறும்பை - பிறிவுக்காம்
குறுஞ்சூலி - அண்டமெழுகு
நறுமுருங்கை - நாகரச பந்தனம்
பெருங்குறிஞ்சி - கடுப்புப்போம்
ஆயில் - வாதம் போம்
புங்கு - சூலை போம்
மேற்படி பால் - ரண மாற்றி
வலம்புரி - குளிதோஷம் போம்
மருக்காரை - நசியத்துக்காம்
பாற்பை - சவ்வீரங் கட்டும்
இருள் - குடாரம் போக்கி
பாலிருள் - சூத பந்தனம்
இருள் வீடு - காந்த சத்து
களாவிழுது - வெடியுப்பு கட்டு
மராமரம் - சூடங் கட்டு
குமுகு - பற்குறுதி
தழுதாழை - வாதம் போக்கி
தெற்கை - கிரிச்சம் போக்கி, சுளுக்கு போக்கி
ஆதண்டை - பீனிசம் போக்கி, சிரநீர் போக்கி
குழலாதண்டை - சரக்கெல்லாம் கட்டும்
செவ்வாதண்டை - சூதவங்கி
நாணல் - துன் மாங்கிஷம் போக்கி
திமிசு - சாரங் கட்டு
பூசபத்திரி - வசீகரி
விடத்தேற்கு - சூதபற்பி
நெட்டி - நீரைக் கட்டும்
நளந்துவயம் - நாக செந்தூரி
பெருவாழை - ஈய செந்தூரி
உத்தாமணி - மாந்தம் போக்கி, பவள பற்பி, அயசிந்தூரி
பிராமுட்டி - சாரஞ் சாம்
குறிஞ்சி - மயிலிறகு சத்தாம்
தந்தசகுரி - இரும்புருக்கி
செப்பு நெருஞ்சில் - சிறுநீர் உஷ்ணம் போகும்
கணம்பு - சிலைமெழுகாம்
கல்புகு வெள்ளி - காயசித்தி
முளிகாக்கு - கல்லுப்புக் கட்டு
அசோகுக்கு - குன்மம் போகும்
வாலுகம் - கடிகள் போகும்
முத்தக்காசு - சுரதோஷம் போம்
அதிங்கு - கைகால் நோய் நீக்கம்
வெள்ள நாகணத்தி - விரோசனி
நேர்வாளம் - பேதி, பரநாசி
குறட்டை - கோழை பீனிஸம் போம்
கஞ்சாங்கோரை - குளிர் போம்
மருவகம் - தாகம் போம்
இங்குணம் - லிங்க மிறுகும்
இடுகாட்டுத் துளசி - இரைப்பு நீக்கி
திப்பிலி - தாது விருத்தி
சாசி - பாம்பு பக்ஷி கடி போக்கி
அனிச்சை - சொறி போக்கி
தாழை - சூத சுத்தி
குப்பை மேனி - உப்புக்கட்டு
செருப்படி - சிலேட்டுமம் போம், மேகம் போம்
ஆடுதின்னாப்பாளை - நாக பந்தனம், புழுக்கொல்லி
வெற்றிலை - நாகநீற்றி, ஜீர்ணகாரி, சூத சுத்தி
ஆகாசகருடன் - சூத பந்தனம், அண்ட வெண்கரு
ரத்தமண்டலி - இரும்புருக்கி, பூரங் கட்டி
காட்டாமணக்கு - அயலோக வங்கி
மருதணி - அயச்செம்பி, கெந்தி கட்டி
கஞ்சா - யோகி
நிலவாகை - புழுக்கள் போக்கி
கட்டுக்கொடி - உப்புக்கட்டு, சூதவெண்ணெய்க் கட்டு
புரண்டை - வைரநீற்றி, சூதவெண்ணெய் பந்தனி
வல்லாரை - உடலந்தேற்றி, காமநாசி
மயூரசிகை - நாக பந்தனம்
தாம்பரசிகை - சூத பந்தனம்
கானல்மா - பித்தளை நீறும்
தில்லை - பாஷாணஞ் சாம்
மலைமா - குடவ நீறும்
கப்பட்டி - குதிரைப் பல் மெழுகு
புளிச்ச சிறுக்கீரை - சூத பந்தனம், தாம்பர சிந்தூரி
நீரரளி - அயச் செம்பி
செவ்வறளி - தங்கச் செம்பி
சத்திச் சாரணை - காரீய பற்பி, வாத நாசி
தும்பை - சுரங்கள் போக்கி, சில் விஷம் போக்கி, சிரோரோகம் போக்கி
பேய்த்தும்பை - தோஷம் போக்கி
பேய்க்கொள்ளு - சகல சத்துமாம்
பேய்க்கடலை - கெந்தி தைலம்
பேய்த்துவரை - தாளக தைலம்
அழுகண்ணி - சூத பந்தனம்
தொழுகண்ணி - துணித்த சதை கூடும்
முடவாட்டுக்கால் - சவ்வீரங் கட்டும்
நாகசிங்கி - நாக பந்தனம்
இருப்பவல் - மாகட்டி
பொன்மத்தை - சூத பந்தனம்
கருமத்தை - கெந்தி பந்தனம்
நச்சுப் பூலா - செந்தூர குருவாம்
நான் முகப்புல் - ஈய பற்பி
காவட்டம்புல் - மந்தம் போக்கி
சுனைமரம் - சூத பந்தனம்
எருமைக்கனைச்சான் - தேகசித்தி
ரோமவிருட்சி - சகலசித்தி
செந்தாடுபாவை - தங்கச் செம்பு
முண்டிளி - சித்து
சாயாமரம் - மாவேதை
கருநெல்லி - சகலசித்தி
கல்லாரை - சூதங் கல்லாம்
கல்ச்செம்பு - சூத குரு
கல்லறளி - தங்கச் செம்பு
மூவிலைக்குருத்து - சூத மணி
முத்துருக்கன்செவி - சூத பந்தனி
செந்திராய் - சூதச் செம்பு
செம்பல்லி - சூதங் கட்டும்
செவ்வகத்தி - சாதிலிங்க மைனி
நிலச்சோதிக்கு - கண்டர் வெளுப்பு
நிலக்கடம்பு - அப்பிரகஞ் சத்து
பிறங்கைநாரிக்கு - கெவுரிக் கட்டு
பூதணக்கு - மால்தேவிக் கட்டு
செருந்தி - பாஷாணங் கட்டும்
கொத்தான் - பித்தம் போக்கி
வறச்சுண்டி - நீரைக் கட்டும்
ஆமிரம் - வெடியுப்புக் கட்டும்
கட்டுமா - தாபம் போக்கும்
அம்பளங்காய் - கல்லுப்புக் கட்டு
புனம்பிளி - சாரங் கட்டும்
இதளை - சூலை போம்
தும்பி - சூத பற்பி
சிறுதும்பி - சோகம் தீர்க்கும்
சோனகப்பூ - பாதரஸமாம்
திராய் - சன்னி போக்கும்
பேய்த்துமிட்டி - பாஷாணங்கட்டும்
பெருங்கம்பி - வெள்ளீய பற்பி
மரிதுடாரி - மால்தேவி பற்பி
(மறிதொடரி - மால்தேவி பற்பி)
தேவதாளி - சூத பற்பி
தாளி - இரைப்பு இருமல் மூர்ச்சை போக்கும்
நறுந்தாளி - சிலேட்டுமம் போம்
நாகதாளி - நாகங் கட்டும்
பேய்ச்சுரை - விஷம் போம்
பேய்ப்பீர்க்கு - கெந்தி தயிலம்
சற்பாக்ஷி - பாம்பு விஷம் போம்
பைசாசப் பீர்க்கு - விஷம் போம் பேதி
சுவசற் பாக்ஷி - இங்குலிகங் கட்டும்
விட்டுணு காந்தி - சுரங்கள் போம்
நாகபாலை - தாம்பர செந்தூரம்
நீர்க்கடம்பு - ஈயச் செந்தூரம்
ஈகை - தாளக செந்தூரம்
நறுவெளி - நாக்குப் புண்ணாறும்
புளிவஞ்சி - நாக ரஸம்
சிறுகல்லு - கல்லுப்பு கட்டு
வெட்புலா - உஷ்ணம் போம்
நீர்ப்புலா - போகமிக்காம்
தலைச்சூடு வள்ளி - ரசங் கட்டும்
பிரமதண்டி - சூதங் கட்டும்
பொடுதலை - வயிறுகடுப்புப் போம், வெட்டை போம், நீரொழுக்குப் போம்
கோடகசாலை - வயிறு புழுப்போம்
இடுகொள்ளு - சத்து ஆம்
காட்டுக்கொள்ளு - காரங் கட்டும்
நாட்டுக்கொள்ளு - சாரங் கட்டும்
கரும்பு - பசாசு போம்
தின்பு - சிலை கட்டு
துரும்பு - சூத பற்பி
முட்பலா - ஆண்மை
வன்மறை - அரிதார வெள்ளை
வெள்வேல் - விரணம் போக்கி
கருவேல் - பல்லிறுக்கி
காஞ்சிரம் - காயசித்தி
மலையத்தி - பேதி கட்டும்
சடைச்சி - விரியன் விஷம் போம்
கப்புச்சடைச்சி - கண்டர் வெள்ளை
தமனகம் - தம்பனை
சத்துகம் - உப்புக் கட்டு
மாஞ்சரோணி - கண் புகைச்சல் தீரும்
மூங்கிலரிசி - தோஷம் போம்
மூங்கில் குருத்து - ரத்தம் போம், வங்க வட்டை, வங்கபற்பி
செவ்விறகு - அயச் செம்பு
செம்மரம் - தங்கச் செம்பு
ஒருகொம்பு - ரஜிதச் செம்பு
நீர்விளா - பைத்தியம் போகும்
கழுதை மான் புள்ளி - வெள்ளீயங் கட்டும்
நெய்ம்மரம் - அரிதாரங் கட்டும்
பொன்வண்ணச்சாலி - தங்கமாம்
செழுமலர்க்கொன்றை - புழு நீக்கும்
பெருமலர்க்கொன்றை - கிருமி போக்கும்
ஓமை - தினவு போக்கும்
சிறுநிலக்கு - நரைகள் போம்
குறிதிமாறிக்கு - துரிசுச் செம்பு
புளிநறளை - திமிர் போக்கி
பேய்க் கும்மட்டி - லிங்கங் கட்டும்
சுண்டைக்காய் - சுரங்கள் போம்
காரெள்ளு - திலகமாம்
பித்தரோகணி - கண்டுறந்தி
நெல்லி - கெந்திச் செம்பு
சின்னக்கை - தைலத்தாதி
ஆவாரை - ஈயச் செந்தூரி
காட்டுக்கருணை - கெந்தி வெள்ளை
ருதந்தி - சிலை தைலம்
ஆதளைக் காய் - சூதஞ் சாம்
நரிமுருக்கு - க்ஷயம் போம்
கிளிமுருக்கு - அயச் செந்தூரம்
நெபத்திகை - காய சித்தி
மஞ்சிபத்திரம் - காந்தச் செம்பு
நாய்வேளை - மலங் கட்டும்
பச்சைநாவி - சூதங் கட்டும்
மாகாளி - மயக்கம் போம்
தாளிப்பனை - சலங்கள் போம்
விறுத்தி - சவுக்கார சுண்ணம்
ஓரிலைத்தாமரை - அழத்தி போம்
நீர் முள்ளி - வீக்கம் போம்
வெள்ளை நீர்முள்ளி - செம்பு குருவாகும்
நல்லாரை - சூதவெண்ணெ யிறுகும்
கசப்புப் பசளை - சூதங் கட்டும்
இருவேலி - தாபத்தைப் போக்கும்
பருத்தி - பெரும்பாடு போக்கும்
செம்பருத்தி - பித்தம் போம்
அகத்தி - வேக்காடு போம்
அரைக்கீரை - சுரம் போக்கும், கருவங்கபற்பி
கொடிதும்பை - சூதங் கட்டும்
வனமிட்டி - சாரங் கட்டும்
பூசனி - ஊறல் போக்கும், வசீகரி
கக்கரி - நீர் பெருக்கும்
கொம்மட்டி - வாதமாற்றும்
இரும்பிலி - கெந்தி தைலம்
முளகரணை - கிரந்தி போம்
அவிரிக்கு - லிங்கங் கட்டும், சகல விஷம்போம்
களவு தும்பை - மூலம் போக்கும்
பிறங்கு நாரி - வெடியுப்புக் கட்டும், பொட்டிலுப்பு கட்டும்
செங்கத்தாரி - அயச் செம்பி
காட்டுத்தி - கண்டர் வெளுப்பாம்
புல்லூரி - கருங்குட்டம் போம்
திலகம் - தொட்டிச் சிந்தூரம்
உச்சிச்சில் - குதிரைப் பல் கட்டும்
பாவட்டை - வாதம் போக்கும்
கொடிக் கொத்தான் - பாஷாணங் கட்டும்
ஒடமெட்டி - காயமுறுதி
செம்பரத்தை - சாதிலிங்க மைனம்
கொடிக்கள்ளி - பாஷாணக் கட்டு, நாகமணல், நாகபஸ்பம்
இலைக்கள்ளி - பாஷாணஞ் சாம்
திருகுகள்ளி - கெவுரி கட்டும்
மான்செவிக்கள்ளி - நாகபற்பி, தாளகந்தனை மெழுகு
மலை பொன்னாவாரை - வீர மெழுகு
பொன்னாவாரை - ஈய செந்தூரி
ஒதி - விரண மாற்றும்
புன்னை - விரண மாற்றும்
சுரபுன்னை - அரிதாரங் கட்டும்
நறும்பிசின் - நாகங் கட்டும்
சன்னை - சிலை கட்டும்
உகாய் - அப்பிரகஞ் சத்து
சிவப்பு நெல்லி - காயமுத்தும்
காட்டுவெந்தியம் - தாம்பர தங்க பற்பி
தூதுளை - கபநாசி, அறிவு விருத்தி
மஞ்சணாத்தி - உப்புக் கட்டி
கற்றாழை - வங்க சிந்தூரி
செங்கற்றாழை - சிந்தூரத் தாதி
கருங்காந்தள் - அறுத்த துண்ட மொன்றும்
முத்துப்பூடு - மிர்தபட்சி சீவிக்கும்
குளுந்த கொள்ளி - குக்குடாண்ட ஜனிதி
கருநாயுருவி - கர்ப்பார்த்த பிரஸவம்
கொடிவேலி - சீதபேதி கட்டும்
மேற்படி மூல தைலம் - லிங்கங் கட்டும்
செங் கொடி வேலி - செந்தூராதி
நாகக்கொட்டைத் தைலம் - நாகங் கட்டும்
துளசி - மேற்படி நாகத்தைச் சுன்னிக்கும்.
மூலிகை குண அட்டவணை முற்றிற்று.