ஜீவகாருண்ய ஒழுக்கம் - 1
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் 2. சுத்த சன்மார்க்கத்தின் முதற் சாதனமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கம்
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் 2. சுத்த சன்மார்க்கத்தின் முதற் சாதனமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கம்
திருச்சிற்றம்பலம் ஜீவகாருண்ய ஒழுக்கம் இரண்டாவது பிரிவு ஆன்ம இன்ப வாழ்வு உலகத்தில் உயர்பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க தலைப்பட்ட ஆன்ம இன்ப சுகத்தைக் காலமுள்ள போதே விரைந்து அறிந்து அடைய வேண்டும்.
ஜீவகாருண்ய ஒழுக்கம் மூன்றாவது பிரிவு ஜீவகாருண்யத்தின் சொரூபம் முதலியன திருச்சிற்றம்பலம் சீவகாருணியமாகிய ஆன்ம உருக்கம் உண்டாவதற்கு உரிமை எது என்றறியவேண்டில்:- சீவர்களெல்லாம் ஒரு தன்மையாகிய கடவுளியற்கை உண்மை ஏகதேசங்களாகிக் கடவுளருட்சத்தியால் பூதகாரிய தேகங்களில் வருவிக்கப்பட்டபடியால் இச்சீவர்களெல்லாம் ஓருரிமை இனத்தவர்களே யாகும். சகோதரர்களுள் ஒருவர் ஒரு ஆபத்தால் துக்கப்படுவதைக் கண்டபோதும் கேட்டபோதும் அறிந்தபோதும் - அவர் தேகம் தமது சகோதர தேகமென்று தெரிந்துகொண்ட - மற்றொரு சகோதரருக்கு உருக்கமுண்டாவது தேக