ஜீவகாருண்ய ஒழுக்கம் - 1

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் 2. சுத்த சன்மார்க்கத்தின் முதற் சாதனமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கம்

ஜீவகாருண்ய ஒழுக்கம் - 2

 திருச்சிற்றம்பலம் ஜீவகாருண்ய ஒழுக்கம் இரண்டாவது பிரிவு ஆன்ம இன்ப வாழ்வு உலகத்தில் உயர்பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க தலைப்பட்ட ஆன்ம இன்ப சுகத்தைக் காலமுள்ள போதே விரைந்து அறிந்து அடைய வேண்டும்.

ஜீவகாருண்ய ஒழுக்கம் - 3

ஜீவகாருண்ய ஒழுக்கம் மூன்றாவது பிரிவு ஜீவகாருண்யத்தின் சொரூபம் முதலியன திருச்சிற்றம்பலம் சீவகாருணியமாகிய ஆன்ம உருக்கம் உண்டாவதற்கு உரிமை எது என்றறியவேண்டில்:- சீவர்களெல்லாம் ஒரு தன்மையாகிய கடவுளியற்கை உண்மை ஏகதேசங்களாகிக் கடவுளருட்சத்தியால் பூதகாரிய தேகங்களில் வருவிக்கப்பட்டபடியால் இச்சீவர்களெல்லாம் ஓருரிமை இனத்தவர்களே யாகும். சகோதரர்களுள் ஒருவர் ஒரு ஆபத்தால் துக்கப்படுவதைக் கண்டபோதும் கேட்டபோதும் அறிந்தபோதும் - அவர் தேகம் தமது சகோதர தேகமென்று தெரிந்துகொண்ட - மற்றொரு சகோதரருக்கு உருக்கமுண்டாவது தேக

மனு முறைகண்ட வாசகம்

காப்பு நேரிசை வெண்பா அன்ன வயல்சூழ் அணியாரூர் வாழ்மனுவாம் மன்னன் முறைகண்ட வாசகத்தைப் - பன்னுதற்கு நேய மிகத்தான் நினைப்போர்க் கருள்புழைக்கைத் துய முகத்தான் துணை.

அணிந்துரை: சுவாமி சரவணானந்தா

அணிந்துரை: சுவாமி சரவணானந்தா திருஅருட்பா மூன்று பகுதிகளாக இருக்கின்றன. முதல் பகுதி திருஅருட்பா பாடல்களில் முதல் ஐந்து திருமுறைகளைக் கொண்டது. இரண்டாவது பகுதி ஆறாம் திருமுறைப் பாடல்களை உடையது. மூன்றாம் பகுதி உரைநடைப் பகுதி. திருஅருட்பா ஆறு திருமுறைப் பாடல்களையும் விளங்கிக்கொள்வதற்கு வேண்டிய சன்மார்க்க விளக்கங்கள் திருஅருட்பா உரைநடைப் பகுதியில் இருக்கின்றன. திருஅருட்பா பாடல்களின் பொருள்கள், உபாயப் பொருள், உண்மைப் பொருள், அனுபவப் பொருள் என்று மூன்று வகைப்படும். உபாயப் பொருள் என்பது திருஅருட்பா பாடலில்

ஆராய்ச்சிக் குறிப்புகள் - உரைநடை நூல்கள் - தவத்திரு. ஊரன் அடிகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள் 1. உரைநடை நூல்கள் 1. மனு முறைகண்ட வாசகம் இது மனுச்சோழர் முறை செய்த வரலாற்றைக் கூறுவது. பெரிய புராணத்திலுள்ள மனு நீதி கண்ட புராணத்தை முதல்நூலாகக் கொண்டு அதன் வழி நூலாக அடிகள் இதனை எழுதியருளினார். இதனை எழுதும்படி அடிகளைக் கேட்டுக் கொண்டவர்கள் சென்னை சாஸ்திர விளக்க சங்கத்தார். எழுதப் பெற்ற காலம் அடிகள் இளம் போதில் சென்னையில் உறைந்த காலம். சென்னையிலிருந்த காலத்திலேயே 1854 வருடம் ஜூன் மாதம் இது அச்சிடப் பெற்றது. அம்முதற் பதிப்பின் முகப்பேடு வருமாறு: உ - சிவமயம் - திருச்சிற்றம்பல