1. சாலைத் தொடக்கவிழா அழைப்பு:
(1) உ கடவுள் துணை சாந்த சித்தமுடைய சாமியவர்களுக்கு வந்தனம்.1 சிதம்பர தலத்துக்குச் சுமார் இருகாத வழிநடை யெல்லையில் கூடலூரைச் சார்ந்த வடலூ ரென்றும் பார்வதிபுரமென்றும் வழங்கப்படுகின்ற ஊருக்கு வடபுரத்தில் சென்ன நகரிலிருந்து கும்பகோணத்திற்குப் போகின்ற பெரிய பாட்டை 125வது மயிலில் மஞ்சக் குப்பத்திலிருந்து விருத்தாசலம் போகின்ற பாட்டை 23ஆவது மயிலில் பிரபவ வருடம் வைகாசி மாதம் 11ஆம் நாள்2 குரு வாரம் உதயகாலம் சிங்கலக்கினத்தில் சமரச வேத தருமச்சாலையின் செங்கற் கட்டடங்களுக்கு அஸ்தி வாரங்களும் கிணறு குளம் கேணி மு