10. சமரச வேத பாடசாலை (11 - 1 - 1872)

திருச்சிற்றம்பலம்

இஃது சமரச வேத பாடசாலை

இதில் வாசிக்க விரும்புகின்றவர்கள் பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களாகி, நல்லறிவு, கடவுள் பக்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங்களையும் உண்மையுரைத்தல் இன்சொல்லாடல் உயிர்க் குபகரித்தல் முதலிய நற்செய்கை ஒழுக்கங்களையும் பெற்று சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்களாகியிருத்தல் வேண்டும்.

இதில் வாசிக்கின்றவர்களுக்கு சிலகாலம் வாசித்து ஒருவாறு வாசிப்பிற் பயிற்சி நேரிட்டால், அந்தப் பயிற்சிக்கும் அவரவர்கள் குடும்பத்திற்கும் தக்கபடி மாதந்தோறும் பொருளுதவி செய்யப்படும். காலை மாலை சுமார் ஐந்தைந்து நாழிகை வாசித்தல் வேண்டும்.

திருச்சிற்றம்பலம்பிரஜோற்பத்தி வருடம்தநுர் மதி 29ஆம் நாள்* * *

10. சமரச வேத பாடசாலை (11 - 1 - 1872) | Vallalar.Org — Thiru Arutprakasa Vallalar