திருவருண் மெய்ம்மொழி

திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 5. திருவருண் மெய்ம்மொழி ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்கப் பெருநெறியின் உண்மை ஒழுக்கங்களைக் குறிக்கும்

அருள்நெறி

 திருச்சிற்றம்பலம் 4. அருள்நெறி கடவுளது திருவருளை எவ்வாறு பெறக்கூடும்? அருளென்பது கடவுள் தயவு. ஜீவகாருண்ய மென்பது ஜீவர்கள் தயவு. ஆதலால் சிறு வெளிச்சத்தைக்கொண்டு பெரு வெளிச்சத்தைப் பெறுவதுபோல், சிறிய தயவாகிய ஜீவ தயவைக் கொண்டு பெருந்தயவாகிய கடவுளருளைப் பெறவேண்டும். அக் கடவுள் தயவாகிய அருள் எத்தன்மை யுடையது? நமது ஆன்ம அறிவாகிய புத்தி தத்துவத்தினுக்கு நன்மை தீமையை விளக்கிக்காட்டுவதாயும், வேதாகம கலைகளைக் கொண்டு நன்மையாதிகளை விதிப்பதாயும், அறிபவர்களின் தரத்திற் கொத்ததாயும், அறிபவர்கள் எந்த வஸ்துவை அறிக

பேருபதேசம்

திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 6. பேருபதேசம் ஸ்ரீமுக வருஷம், ஐப்பசி மாதம், 7ஆம் நாள், புதவாரம், பகல் 8 மணிக்கு, மேட்டுக்குப்பம் என்னும் சித்திவளாகத் திருமாளிகையில் முதல் முதல் கொடி கட்டினவுடனே நடந்த விவகாரத்தின் குறிப்பு. இங்குள்ள

நித்திய கரும விதி

 திருச்சிற்றம்பலம் நித்திய கரும விதி 1. சாதாரண விதி சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து, 1

உபதேசக் குறிப்புகள்

 திருச்சிற்றம்பலம் 2. உபதேசக் குறிப்புகள் 1. அண்ட பிண்ட பூர்ண பாவன அனுஷ்டான விதி அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என்கின்ற நாலிடத்திலும் கடவுட் பிரகாச முள்ளது. அதனில் காரியத்தாலுள்ள விபரம்:-

கணபதி பூஜா விதி

2. கணபதி பூஜா விதி திருச்சிற்றம்பலம் நித்திய கர்மானுஷ்டானம் முடித்துக்கொண்டு, தத்துவத்திரய மந்திரத்தால் ஆசமித்து, ஹருதயத்தால் தொடுமிடந் தொட்டு, பஞ்சாக்ஷரத் தியானஞ் செய்து, கணபதியைப் பீடத்தை விட்டு அபிஷேகஸ்தான பாத்திரத்தி லெழுந்தருளப் பண்ணி, பீடத்தைச் சுத்தி செய்து, திருமஞ்சனஞ் செய்ய வைத்திருக்கின்ற தீர்த்த கும்பத்தைக் கந்த புஷ்பங்களால் சூழவும் "சிவாய நம, கவசாய நம" என்று சார்த்தி, பின்பு பஞ்சாக்ஷரத்தால் பதினொரு விசை அர்ச்சித்து, அஸ்திராய படு வென்று மணியசைத்து, அஸ்திராய நம வென்று அர்க்கிய

செவ்வாய்க்கிழமை விரத முறை

3. செவ்வாய்க்கிழமை விரத முறை திருச்சிற்றம்பலம் திங்கட்கிழமை இரவில் பலாகாரஞ்* செய்து, செவ்வாய்க்கிழமை அருணோதயத்தி லெழுந்து, திருநீறு நெற்றியில் மாத்திரம் அணிந்து, நல்ல நினைப்புடன் அங்கசுத்தி தந்தசுத்தி முதலானவையுஞ் செய்து கொண்டு, சூரியோதயத்திற்கு முன் ஆசாரமான சுத்த சலத்தில் ஸ்நானஞ்செய்து, விபூதியைச் சலத்தினால் குழைத்து அனுஷ்டானப்படி தரித்துக்கொண்டு, கணபதியை நினைத்து, பின்பு ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை நூற்றெட்டு முறை செபித்து, பின்பு சிவத்தியானம் செய்து, எழுந்து வாயிலில் வந்து சூரியனைப் பார்த்து ஓம் சிவ சூர

அனுஷ்டான விதி

1. அனுஷ்டான விதி திருச்சிற்றம்பலம் சிவகணபதியே நம வென்று குட்டிக் கொள்ளுகிறது. சிவகுரவே நம வென்று நமஸ்கரிப்பது.

சுப்பிரமணியம்

3. சுப்பிரமணியம் திருச்சிற்றம்பலம் சுப்பிரமணியம் என்பது என்ன? நமது புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தியிருக்கின்றது. இந்த ஜோதிமணியை ஷண்முகமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இதன்றி, நமது மூலாதாரத்திற்கு மேல் மூன்றிடந்தாண்டி விசுத்தியாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடியிருக்கின்றது. இதைச் சுப்பிரமணியம் என்று சொல்லுவார்கள். இந்தத் தேகத்திலுள்ள ஆறறிவும் ஒருங்கே சேர்ந்த சுத்த விவேக மென்பதையும் ஷண்முகமென்பார்கள். ஆறு ஆதாரங்களிலுள்ள ஆறு பிரகாசத்தையு