12. சாலையி லுள்ளார்க்கு இட்ட ஒழுக்கக் கட்டளை 9 - 3 - 1872
உ
சிவமயம்
அப்பாசாமி செட்டியா ரவர்களுக்கு, இந்த சாலையால் எனக்கு மிகவும் சலிப்புண்டாகிறது. அந்த சலிப்பு இரண்டு பக்கத்திலும் உபத்திரவம் பண்ணும். ஆதலால் **சாலையி லிருக்கிறவர்க ளெல்லாம் சன்மார்க்கத்திற்கு ஒத்து வாயடங்கி மனமடங்கி இருக்கவேண்டும்.
என்மேற் பழியில்லை. சொல்லிவிட்டேன். பின்பு வந்ததைப் படவேண்டும்.
பிரஜோத்பத்தி வருடம்
மாசி மாதம் 28ஆம் நாள்
* * *