4. சன்மார்க்க விவேக விருத்தி (1867)
உ
சற்குரவே நம:
சன்மார்க்க விவேக விருத்தி
விளம்பரம்:
அறிவுடைய நண்பர்க்கு அன்பொடு வந்தனஞ் செய்து அறிவிக்கை, நண்பர்களே! உலகில் வழங்கும் பிறப்புகளுள் உயர் பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்ட நாமனைவரும் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நால்வகைப் பொருளின் அனுபவங்களைக் காலமுள்ள போதே அறிந்து அனுபவித்தல் வேண்டும். அங்ஙன மறிந்து அனுபவிப்பதற்குச் சன்மார்க்க விவேக விருத்தியே சாதனமாதலின், அதனையடைதற்குத் தக்க நன்முயற்சிக் கோர் முன்னிலையாகச் சன்மார்க்க விவேக விருத்தி யென்னும் பத்திரிகை யொன்று வழங்குவிக்கு நிமித்தம், இதனடியில் தனித்தனி நம்மா லியன்ற வளவில் மாதந்தோறும் பொருளுதவி செய்வதாகக் கையொப்பமிட்டு மேற்குறித்த வண்ணம் நமக்கும் பிறர்க்கும் பயன்படும்படி வழங்குவிப்போமாக.
இங்ஙனம்
சன்மார்க்க சங்கத்தார்
எண் ஊர்பேர் கையொப்பம் துகை ரூ.அ.பை
- சிதம்பரம் இராமலிங்கம் 100
- கூடலூர் வெங்கடேசய்யர் 100
- கூடலூர் மு. அப்புசாமி செட்டி 100
- கூடலூர் துரைசாமி நாயகன் 100
5 கூடயூர் சின்னசாமிப் பிள்ளை 080 - கூடயூர் கா. அய்யாசாமி 080
- கூடலூர் தேவநாத பிள்ளை 040
- கூடலூர் பபூ. சின்னதம்பி 020
- கூடலூர் ம. வீராசாமி 020
- கூடலூர் கா. இரத்தின ழஃ 020
- கூடலூர் கா.மு. தேவநாயகம் 080
- கூடலூர் வி. இராஜா 040
- கூடலூர் இராமையர் 020
- கூடலூர் விசுவலிங்க முதலியார் 020
- புதுவை குமரப்ப சதாசிவ செட்டி 080
- கூடலூர் விஜயரகுநாதன் 020
- கூடலூர் அப்பாவுஞானியார் 020
- புதுவை மு. அண்ணா சுப்பராயஃ 020
- புதுவை F. குப்புசவாமி நாயுடு 020
- கூடலூர் ந. சிவசிதம்பர செட்டி 040
- புதுவை கி. துரசாமி 080
- திருப்பாதிருப்புலியூர் அ.க. பரமானந்தன் 060
- திருமயிலை முருகேச முதலியார் 020
- திருக்கோவலூர் சுப்பிரமணியன் 020
- அரசூர் இராஜகோபாலு 080
- ஆலப்பாக்கம் சு. நாயினா ரெட்டி 080
- கூடலூர் வரதராசன் 100
- கூடலூர் புதுப்பாளைய சிரஸ்ததார் றாமசந்திர ழஃ 080
- கூடலூர் நாஜர் வா......ரெட்டி 080
- கூடலூர் கெ.....தன் 020
- கூடலூர் குமாரசாமி ழஃ தம்பி ஆறுமுகம் 020
- கூ ம. அரங்கநாதன் 049
- புதுவை கநகசபை 040
- நெல்லி கொமரகுரு 020
- சிதம்பரம் ஆனந்தநாத சண்முக சரணாலயன் 020
- கல்பட்டு ராமலிங்கம் 020
- சி தருமச்சாலை சண்முக பிள்ளை 020
- க தருமச்சாலை நமசிவாயன் 020
- சி வேட்டவலம் அரங்கசாமி 020
- வேட்டவலம் அப்பாசாமி பண்டாரியார் 100
- சிதம்பரம் குழந்தைவேலு 020
- சிதம்பரம் பாவாடைப் பிள்ளை 020
- சிதம்பரம் நா. அருணாசலப் பரதேசி 020
- பனப்பாக்கம் ஆறுமுகம் 020
- பொலவநூர் வேலாயுதம் 020
- பறங்கிப்பேட்டை பரங்கிப்பேட்டை காதர் சாயபு 010
- வடலூர் ஆதிப் படையாச்சி 020
- ஒறத்தூர் அண்ணாமலை நயிநார் 020
- திருநறுங்குன்றம் சி. தானப்ப நயிநார் 020
****************