3. சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்
3. சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம் திருச்சிற்றம்பலம் இயற்கை விளக்கம் என்கின்ற சத்திய ஞானசபைக் கண்ணே, இயற்கை உண்மை என்கின்ற சத்தியத் திருவுருவினராய், இயற்கை உண்மை என்கின்ற சத்தியத் திருவுருவினராய், இயற்கை இன்பம் என்கின்ற சத்தியத் திருநடஞ் செய்தருள்கின்ற இயற்கைத் தனிப்பெருங்கருணைத் தனிப்பெரும்பதியாய தனித் தலைமைக் கடவுளே! தேவரீர் திருவருட் சமூகத்தை அடைந்த உண்மை ஞானிகளின் சித்தி வல்லப தரத்தை வகுத்தறிந்து வாழ்த்துதும் என்று அளவிகந்த முகங்களை கொண்டு அளவு கடந்த நெடுங்காலம் தத்தம் அளவைகளால் தன