6. சன்மார்க்க சங்கம் விளங்கும் காலம் (27 - 4 - 1870)

  1. சன்மார்க்க சங்கம் விளங்கும் காலம் (27 - 4 - 1870)

திருச்சிற்றம்பலம்

இஃது தூற்றாமல் வைக்க

சமரச வேத சன்மார்க்க சங்கம் கூடி விளங்கும் காலம் எது? அது நமக்கு அறிவு வந்த நாள்தொட்டு அந்நாள் பரியந்தம் இறந்து போன நமது சினேகர், உறவினர், அடுத்தோர், வார்த்திபர், வாலிபர், பாலியர், குமாரர், ஆண்மக்கள், பெண்மக்கள் என்பவர் எல்லாம் உயிர்பெற்று எழுந்து மேற்குறித்த சங்கத்தில் கூடி விளங்கும் காலமாகும். இது விஷயத்திற் றருக்கஞ் செய்யப்படாது.

உண்மை.

பிரமோதூத வருடம்

சித்திரை மாதம் 16ஆம் நாள்

உத்தரஞான சித்திபுரம்

* * *

6. சன்மார்க்க சங்கம் விளங்கும் காலம் (27 - 4 - 1870) | Vallalar.Org — Thiru Arutprakasa Vallalar